Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சீன டைட்டானியம் இறக்குமதிக்கு 5 ஆண்டு பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீன டைட்டானியம் இறக்குமதிக்கு 5 ஆண்டு பொருள் குவிப்பு தடுப்பு வரி

மறுஆய்வு முடிவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சீன இறக்குமதிகள் மீது அடுத்த 5 ஆண்டுகளுக்கு குவிப்பு தடுப்பு வரி மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை டைட்டானியம் டை ஆக்சைடு மீது டன்னுக்கு 460 டாலர் முதல் 681 டாலர் வரை குவிப்பு தடுப்பு வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து குறைந்த விலையில் டைட்டானியம் டை ஆக்சைடு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குநரகம் (DGTR) நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது.

டைட்டானியம் டை ஆக்சைடு இறக்குமதி தொடர்பான முதல் குவிப்பு தடுப்பு விசாரணை 2015 ஜூலை 8ல் தொடங்கப்பட்டது. 2016 மே மாதத்தில் தற்காலிக வரியும், 2017 பிப்ரவரியில் இறுதி வரியும் விதிக்கப்பட்டன. கடந்த 2021ல் இந்த வரி மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மறுஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சீன இறக்குமதிகள் மீது அடுத்த 5 ஆண்டுகளுக்கு குவிப்பு தடுப்பு வரி மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்ஹுய் கோல்டு ஸ்டார் டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்துக்கு மெட்ரிக் டன்னுக்கு 609 டாலரும், அதன் வர்த்தகப் பிரிவான அன்ஹுய் கோல்டு ஸ்டார் டைட்டானியம் டை ஆக்சைடு டிரேடிங் உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு 563 டாலரும் வரி விதிக்கப்பட்டுள்ளது.எல்.பி. சியாங்யாங் டைட்டானியம் இண்டஸ்ட்ரி, எல்.பி. சிச்சுவான் டைட்டானியம் இண்டஸ்ட்ரி, எல்.பி. லுஃபெங் டைட்டானியம் இண்டஸ்ட்ரி, எல்.பி. குழுமம் மற்றும் ஹெனான் பில்லியன்ஸ் அட்வான்ஸ்டு மெட்டீரியல் உள்ளிட்ட குறிப்பிட்ட உற்பத்தியாளர்களுக்கு மெட்ரிக் டன்னுக்கு 460 டாலர் வரி விதிக்கப்படும்.

ஆய்வில் மாதிரியாகத் தேர்வு செய்யப்படாத, ஒத்துழைப்பு வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு 510 டாலர் வரி பொருந்தும். பிற குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதி வகைகளுக்கு அதிகபட்சமாக 681 டாலர் வரி விதிக்கப்படும்.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வேறொரு நாட்டின் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும், வேறு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு சீனாவின் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள்களுக்கும் இந்த அதிகபட்ச வரி பொருந்தும்.

உற்பத்தியாளர் அடிப்படையிலான வரி விகிதத்தைப் பெற விரும்பும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளரின் விவரங்களை உறுதிப்படுத்தும் தேதியிடப்பட்டு கையொப்பமிடப்பட்ட வணிக விலைப்பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால், பிற உற்பத்தியாளர்களுக்கான வரி விகிதம் விதிக்கப்படும்.

சில பொருள்களுக்கு விலக்கு

உணவுச் சேர்க்கைப் பொருள்கள், மருந்து மாத்திரைகளின் படலப் பூச்சு, அழகுசாதனப் பொருள்கள், சூரியக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் பொருள்கள் மற்றும் ஜவுளி, நார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகை டைட்டானியம் டை ஆக்சைடுக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 நானோமீட்டருக்கும் குறைவான துகள் அளவைக் கொண்ட மிக நுண்ணிய டைட்டானியம் டை ஆக்சைடின் குறிப்பிட்ட வகைகளுக்கும், அவை சில ஜவுளி மற்றும் பெயிண்ட் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் நிலையில், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஆடைகள், துணிகள் உள்ளிட்ட ஜவுளிப் பொருள்களில் அச்சிடுவதற்கான நிறமியாகப் பயன்படுத்தப்படும் டைட்டானியம் டை ஆக்சைடுக்கு இந்த விலக்கு பொருந்தாது.

முந்தைய செய்தி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் Q2 நிகர லாபம் 3 மடங்கு உயர்வு
அடுத்த செய்தி
விமானத்தை தாக்கிய மின்னல்: அலறிய பயணிகள் - என்ன நடந்தது?

தொடர்புடைய செய்திகள்